இந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்  நாளை நடைபெற உள்ளது.  சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நவீன ஆயுதங்களை அமெரிக்கா  வழங்குவது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டார்,  இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பே பெற்றுள்ளது.  இன்று காலை இந்தியா வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .  

பின்னர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற ட்ரம்ப் அங்கு மகாத்மாவின் வாழ்வியல் நெறிகளை கண்டு வியந்தார்.  பின்னர்  அங்கிருந்து பிறப்பட்ட அவர்,  புதிதாக  கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல்   மைதானத்தில் திரண்டிருந்த சுமார் 1.25 லட்சம் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார் .  அப்போது பேசிய அவர் ,  இந்தியா வேற்றுமைகள் பல இருந்தபோதிலும் ஒற்றுமையுடன் உள்ளது,  இந்தியர்களின்  ஒற்றுமை சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது .  அதேபோல் இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம் ,  பாதுகாப்புத் துறையில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான  ஒப்பந்தங்கள் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.  ராணுவ ஹெலிகாப்டர்கள் , மற்றும் ஆயுதங்களை  இந்தியாவிற்கு தர இந்த  ஒப்பந்தங்கள் செய்யப்பட் உள்ளன . 

இந்தியாவும் அமெரிக்காவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன ,  பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் அதேபோல் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் ,  அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா ஒடுக்கியுள்ளது.  நட்புடன் வந்தால் வரவேற்போம் பயங்கரவாதிகளுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளது .  அதேபோல் தெற்காசியாவில் நிலவும் பயங்கரவாத பிரச்சனைகளுக்கு  தீர்வுக்கான அமெரிக்க தயாராக உள்ளது .  பாகிஸ்தான் அமெரிக்கா நட்பாக உள்ளது , ஆனால் பலமுறை இது குறித்து  பாகிஸ்தானிடம் கூறியும் பெரிய மாற்றங்கள் இல்லை ,  ஆகவே பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றார் .