எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனாவால் அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,  அங்கு இறப்பவர்களின் உடல்களை புதைக்க முடியாத நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன,  கொரோனா உலகம் முழவதும் வேகமாக பரவி வருகிறது  வைரஸ்  பரவலால் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் .  35 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால்  பாதிப்படைந்துள்ளனர் இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் மயமாகவே நியூயார்க் மாகாணம் மாறியுள்ளது.உலகிலேயே இங்குதான் அதிக பட்ச மாணவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது ,

 

அதேபோல் மற்ற பகுதிகளைவிட இங்குதான் உயிர் பலியும் அதிகமாக உள்ளது நியூயார்க் நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  கிட்டத்தட்ட அங்கு மட்டும் 23 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் .  ஒவ்வொரு நாளும் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர் ,  இந்நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 299 பேர் உயிரிழந்துள்ளனர் இது குறித்து  தெரிவித்துள்ள ஆளுநர் ஆன்ரூ கியுமோ இது ஓரு மோசமான செய்தி என தெரிவித்துள்ளதுடன் அதிகரித்துவரும் எண்ணிக்கை தன்னை திகிலடைய வைக்கிறது என தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் இரண்டு டிரக்குகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் இருந்ததாகவும், 

அதிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததாக ஏபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது இறந்தவர்களின் உடல்களோடு  லாரிகள் நியூயார்க் நகர சாலைகளில் நின்று கொண்டிருக்கின்றன கொரோனாவால் இருந்தாலும் சரி மற்ற நோய்களினால் இறந்தாலும் சரி இறுதி நிகழ்ச்சிகளை நடத்த நியூயார்க் நகரம் போராடி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது ,  வியட்நாம் போரில்  ஏற்பட்ட உயிரிழப்பை விட இது அதிகம் என அமெரிக்கர்கள் அரசை  விமர்சித்து வருகின்றனர் . வரலாற்று ரீதியாக அமெரிக்கா இதுவரை கண்டிராத உயிரிழப்பை  சந்தித்து வருவது அமெரிக்கர்களை கதிகலங்க வைத்துள்ளது .