கொங்கு மண்டலம் உங்க கோட்டைனு சொன்னீங்க என்ன ஆச்சு! தலைமை பொறுப்புக்கு தகுதியானவரா இபிஎஸ்? அதிமுகவை சீண்டிய BJP
அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக் கொண்டு இதை செய்திருக்க கூடாது. அண்ணாமலை தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்.
அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக் கொண்டு இதை செய்திருக்க கூடாது என கூறி அண்ணாமலை ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி விமர்சித்துள்ளார்.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் #420 மலை என்று கடுமையாக விமர்சித்து அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மறுநாளே தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க;- KT.ராகவனை திட்டமிட்டு காலி செய்த அண்ணாமலை! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி கிழித்து தொங்கவிட்ட திலீப் கண்ணன்
மேலும், பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தது அண்ணாமலை தான் எனவும் கூறியிருந்தார். அடுத்தடுத்து நிர்வாகிகள் பாஜகவில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக் கொண்டு இதை செய்திருக்க கூடாது என அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவரான அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக் கொண்டு இதை செய்திருக்க கூடாது. அண்ணாமலை தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- கட்சித் தலைவராக இருக்கும் போதே இப்படினா! ஆட்சி அதிகாரத்தில் வந்தால் அவ்வளவுதான்! #420மலை!வச்சு செய்யும் ஜோதிமணி
மற்றொரு பதிவில்;- நாலாண்டு காலம் 420களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என சொல்லிக் கொண்ட அதிமுகவினருக்கு வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். 66000 வித்தியாசத்தில் தோற்றது மீள்வதற்கான அறிகுறி இல்லை. கோட்டையை பிடிப்பதை மறந்து விடுங்கள். தமிழகத்தின் ஒரே எதிர்காலம் பாஜகதான். தமிழகத்தில் பாஜக அண்ணாமலை தலைமையில் ஆட்சியமைக்கும் என அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.