கட்சித் தலைவராக இருக்கும் போதே இப்படினா! ஆட்சி அதிகாரத்தில் வந்தால் அவ்வளவுதான்!#420மலை!வச்சு செய்யும் ஜோதிமணி

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

karur mp jothimani criticized Annamalai

பாஜக மாநில தலைவரின் இன்னொரு முகத்தை #420மலை என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு அக்கட்சியில்  இருந்து ஐடி அணியின் தலைவர் விலகியிருக்கிறார் என கரூர் எம்.பி.ஜோதிமணி கூறியுள்ளார். 

தமிழக பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதுதொடர்பாக நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல நூறு முறை சிந்தித்து இன்று நான் பா.ஜ.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

இதையும் படிங்க;- தமிழக பாஜகவின் முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம்.!! 420மலை தமிழ்நாட்டுக்கு கேடு - பாஜகவில் பரபரப்பு

karur mp jothimani criticized Annamalai

அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய" மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

karur mp jothimani criticized Annamalai

2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும் ?  என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  பாராட்டுக்களால் பரவசப்படுவதும் இல்லை.. தூற்றுபவர்களை கண்டு துக்கப்படுவதும் இல்லை - பாஜக

karur mp jothimani criticized Annamalai

இதுதொடர்பாக கரூர் எம்.பி.ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாஜக மாநில ஐடி அணியின் தலைவர், பாஜக மாநில தலைவரின் இன்னொரு முகத்தை #420மலை என்று  வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். கட்சித் தலைவர் பதவியிலேயே இவ்வளவு ஊழல்! இவர்கள் எல்லாம் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்நாட்டை மொத்தமாக விற்றுவிடுவார்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios