அதிமுக-திமுக இடையேதான் போட்டி மற்றவர்கள் எதிர்க்கட்சி அல்ல உதிரிக் கட்சிகள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். அதிமுக செயற்குழு குறித்து உலவும் செய்திகள் யூகங்கள் மட்டுமே, இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்துதான் ஆலோசிக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்துள்ளார்.

 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையிலும், டெல்லி உயர்நீதிமன்றம் அதிமுக தேர்தல் விதிகள் தொடர்பாக  ஆணையம் முடிவெடுக்க உத்தரவிட்ட நிலையில், அதிமுக செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.  

அதிமுக செயற்குழுவில் அமைதியான, ஆரோக்கியமான முறையில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் எவ்வாறு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் பிரதானமாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதிமுகவுக்கு திமுகதான் எதிரி கட்சி. மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு உதிரி கட்சிகள் என்று தெரிவித்தார்.