3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனையடுத்து  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பல கட்டங்களை கடந்த நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 50லட்சம் ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது.

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனையடுத்து அடுத்ததாக யாரை உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது மூத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா முதல் பொன்முடி வரை... தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் யார்.? யார்.? பட்டியல் இதோ