நாடாளுமன்றத் தேர்தல் பணியில் சரிவர ஈடுபடாத நிர்வாகிகளின் மீதும், உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்க, கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

போக்கு காட்டிய , அதிமுகவினர் ,புகார்,அளிக்க, கூட்டணி கட்சிகள், திட்டம் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, அதிமுக, தலைமை யிலான கூட்டணியில், பிஜேபி - பாமக, - தேமுதிக - தமாகா  - புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றன.

தேர்தல் ரத்துபண பட்டுவாடா புகாரால், வேலுார் லோக்சபா தொகுதியில் மட்டும், தேர்தல் ரத்தானது. மற்ற அனைத்து தொகுதிகளுக்கும், 18ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது. மே, 23ல், எண்ணிக்கை நடக்கிறது.

இந்நிலையில், மே, 19ல் நடக்கும், நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற் கும் கூட்டத்தை, அடுத்த வாரம், சென்னையில் நடத்த, அதிமுக திட்டமிட்டுஉள்ளது.

இது குறித்து, பாமக நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: ஜெயலலிதா இல்லாததால், எளிதில் வெற்றி என்ற கனவில் இருந்த, திமுகவின் திட்டம், அதிமுக, அமைத்த மெகா கூட்டணியால், தவிடுபொடியானது. இதனால், தேர்தல் முடிவு, இரு கூட்டணிக்கும் சமமாக இருக்கும் என்ற தகவல் வருவதால், யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என, மக்கள் மட்டுமின்றி, கட்சியினரே குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலுார், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல், இடைத்தேர்தல் நடக்கிறது. தலைவர்கள் திட்டம்இந்த தேர்தலிலும், அதிமுகவுக்கு, கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை, அடுத்த வாரம் நடத்த, அதிமுக முடிவு செய்துள்ளது.

அப்போது, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல் வர் பன்னீர்செல்வத்திடம், லோக்சபா தேர்தல் பணியில் சரியாக ஈடுபடாத, அதிமுக மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பட்டியலை வழங்க, கூட்டணி கட்சி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.