தமிழக அரசியல் களத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் மனதில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கான ஆதரவு எப்போதுமே தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது. தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, தினகரன் தலைமையிலான அமமுக, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், பாஜக, காங்கிரஸ் இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன. இதில் வரப்போகும் தேர்தலில் மக்கள் யார் பக்கம்? என்று நடத்தப்பட்டிருக்கும் இந்த ஆய்வில், திமுக தான் முன்னணியில் இருக்கிறது. அடுத்த இடத்தில் கமலோ ரஜினியோ இல்லை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிமுக தான் இருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவு தமிழக மக்களின் அரசியல் சார்ந்த முடிவுகளில் இருக்கும் மனநிலையை வெளிப்படையாக காட்டுகிறது. என்ன தான் ரஜினி,  கமல் போன்ற நட்சத்திரங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தாலும், தேர்தல் என வரும் போது திமுக மற்றும் அதிமுக மீதான மக்களின் நிலைப்பட்டை இந்த ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில், AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு, தமிழகம் முழுவதும் 11,691 பேரிடம் கருத்து கேட்டது.. இதில் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை முன்வைத்து  ஜாதி ரீதியாக  யார் யாருக்கு எத்தனை வாக்கு சதவிகிதங்கள் உள்ளன?   என கேட்டதில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியுமே அதிக வாக்கு வங்கிகளை வைத்துள்ளது.

"திமுகவின் பலம்"

தலித் ( SC & ST ) 30%, வன்னியர் – 28%, செட்டியார் 28% சதவிகிதமும், நாடார் 36%  சதவிகிதமும், கோனார் மற்றும் முதலியார் 29%, முதலியார் 28%, வெள்ளாள கவுண்டர் 29%, கொங்கு வெள்ளாளர் 16%, முக்குலத்தோர் 23%, உடையார் 31%, நாயுடு 33%, ரெட்டியார் 27% என சாதி வாரியாக  சர்வே எடுத்ததில் ஒட்டுமொத்தமாக 30 சதவிகித வாக்குகளுடன் முதலில் இருக்கிறது.

"ஓபிஎஸ் - ஈபிஎஸ் வைத்திருக்கும் வாக்கு வங்கி"

அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு அணிகளை தனித்தனியாக முன்னிறுத்தி எடுக்கப்பட்ட  சர்வே முடிவில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது தெரிகிறது. இதில், தலித் ( SC & ST ) 21%, வன்னியர் – 22%, செட்டியார் 25% சதவிகிதமும், நாடார் 26%  சதவிகிதமும், கோனார் மற்றும் முதலியார் 26%, வெள்ளாள  கவுண்டர் 29%, கொங்கு வெள்ளாளர் 16%, முக்குலத்தோர் 46%, உடையார் 21%, நாயுடு 17%, ரெட்டியார் 27% என சாதி வாரியாக  சர்வே எடுத்ததில் ஒட்டுமொத்தமாக 27 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஜாதி ரீதியாக  ரஜினிக்கு கிடைக்கும் வாக்கு?

தலித் ( SC & ST ) 14%, வன்னியர் – 7%, செட்டியார் 7%, நாடார் 12% , கோனார் மற்றும் முதலியார் 15%, முதலியார் 8%, வெள்ளாள கவுண்டர் 11%, கொங்கு வெள்ளாளர் 15%, முக்குலத்தோர் 9%, உடையார் 5%, நாயுடு 12%, ரெட்டியார் 10% என சாதி வாரியாக எடுக்கப்பட்ட சர்வே எடுத்ததில் ஒட்டுமொத்தமாக 13 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவாது இருக்கிறது.

காங்கிரசின் பலம்?

தலித் ( SC & ST ) 7%, வன்னியர் – 8%, செட்டியார் 7%, நாடார் 7%, கோனார் மற்றும் முதலியார் 7%, வெள்ளாள  கவுண்டர் 10%, கொங்கு வெள்ளாளர் 5%, முக்குலத்தோர் 5%, உடையார் 16%, நாயிடு 9%, ரெட்டியார் 7% என சாதி வாரியாக எடுக்கப்பட்ட சர்வே எடுத்ததில் ஒட்டுமொத்தமாக 7 சதவிகித வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

விஜயகாந்த் வைத்திருக்கும் வாக்கு வங்கி?

விஜயகாந்த் 6 சதவிகித வாக்குகளில்  தலித் ( SC & ST ) 5%, வன்னியர் – 5%, செட்டியார் 5%, நாடார் 6%, கோனார் மற்றும் முதலியார் 5%, வெள்ளாள கவுண்டர் 2%, கொங்கு வெள்ளாளர் 8%, முக்குலத்தோர் 8%, உடையார் 4%, நாயுடு 7%, ரெட்டியார் 8% என சாதி வாரியாக எடுக்கப்பட்ட சர்வே எடுத்ததில் ஒட்டுமொத்தமாக 6 சதவிகித வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கமலுக்கு கிடைக்கப்போவது?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆரம்பித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலித் ( SC & ST ) 4%, வன்னியர் – 4%, செட்டியார் 6%, நாடார் 7%, கோனார் மற்றும் முதலியார் 6%, வெள்ளாள  கவுண்டர் 7%, கொங்கு வெள்ளாளர் 6%, முக்குலத்தோர் 5%, உடையார் 6%, நாயிடு 7%, ரெட்டியார் 11% என சாதி வாரியாக  சர்வே எடுத்ததில் ஒட்டுமொத்தமாக 5  சதவிகித வாக்குகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

"வட மாவட்டங்களில் வல்லமை படைத்த பாமக" 

பாட்டாளி மக்கள் கட்சி தலித் ( SC & ST ) 2%, வன்னியர் – 20%, செட்டியார் 5%, நாடார் 2%, கோனார் மற்றும் முதலியார் 4%, வெள்ளாள கவுண்டர் 4%, கொங்கு வெள்ளாளர் 2%, முக்குலத்தோர் 1%, உடையார் 0%, நாயுடு 4%, ரெட்டியார் 2%  என நான்கு சதவிகித வாக்குகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.

பாஜகவின் பலம்?

ஆளும் தேசிய கட்சியான பாஜகவை பொறுத்தவரை தலித் ( SC & ST ) 1%, வன்னியர் – 1%, செட்டியார் 6%, நாடார் 2%, கோனார் மற்றும் முதலியார் 3%, வெள்ளாளக்  கவுண்டர் 6%, கொங்கு வெள்ளாளர் 3%, முக்குலத்தோர் 1%, உடையார் 7%, நாயிடு 5%, ரெட்டியார் 10%

தினகரனின் செல்வாக்கு?

தினகரனுக்கு,  தலித் ( SC & ST ) 2%, வன்னியர் – 4%, செட்டியார் 5%, நாடார் 1%, கோனார் மற்றும் முதலியார் 3%, வெள்ளாள  கவுண்டர் 2%, கொங்கு வெள்ளாளர் 3%, முக்குலத்தோர் 2%, உடையார் 2%, நாயுடு 3%, ரெட்டியார் 5% இப்படி தமிழக அரசியல் கட்சிகள் வாக்குகளை வைத்துள்ளது.

புதியதாக வந்துள்ள கமலுக்கும், வரவுள்ள ரஜினிக்கும் பெரியதாக வாக்கு சதவிகிதங்கள் இல்லை இதில், இன்றுவரை தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் என்று பார்த்தால் திமுக மற்றும் அதிமுகவின் பெயர் தான் அந்த பட்டியலில் மாறி மாறி இடம் பெறுகிறது.