Asianet News TamilAsianet News Tamil

இனி எல்லா ஊர்பெயர்களையும் தமிழில் எழுதவேண்டும்.. முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு.!!

தமிழகத்தில் உள்ள  ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
All the names should be written in Tamil .. Chief Minister Palanisamy directive !!
Author
Tamilnadu, First Published Jun 11, 2020, 8:32 AM IST

தமிழகத்தில் உள்ள  ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

All the names should be written in Tamil .. Chief Minister Palanisamy directive !!

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..." எழும்பூர் எக்மோர் என்றும், திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் என்றும், வண்ணாரப்பேட்டை வாஷர்மேன் பேட் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதனை முழுமையாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதனை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் தமிழில் ஒருமாதிரியும் ஆங்கிலத்தில் ஒரு மாதிரியும் உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக தூத்துக்குடியை tuticorin என்று அழைப்பார்கள். இனி தூத்துக்குடி என்று தான் அழைக்க வேண்டும். எழும்பூரை ஆங்கிலத்தில் எக்மோர் என குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

All the names should be written in Tamil .. Chief Minister Palanisamy directive !!

அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். கோயம்புத்தூர் – KOYAMPUTHTHOOR, தரும‌புரி – THARUMAPURI, ஆலங்குளம் – AALANGGULAM, திருமுல்லைவாயல் – THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி – POOVIRUNTHAVALLI,ட மயிலாப்பூர் – MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை – SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios