Asianet News TamilAsianet News Tamil

தினகரனுக்கு மறுப்பு... கமலுக்கு அழைப்பு... முதல்வர் எடப்பாடியின் பஞ்ச தந்திரம்..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அமமுக கட்சித்தலைவர் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

All party meeting...MNM party Invitation
Author
Tamil Nadu, First Published Jul 8, 2019, 4:38 PM IST

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அமமுக கட்சித்தலைவர் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

 All party meeting...MNM party Invitation

பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். எதிர்க்கட்சிகளைக் கூட்டி இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். All party meeting...MNM party Invitation

69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிடையே 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். All party meeting...MNM party Invitation

இந்நிலையில் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மக்கள் நீதிமய்யத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று கமல்ஹாசன் பங்கேற்பதாகவும் அறிவித்தார். ஆனால், அமமுக கட்சிக்கு இந்த கூட்டத்தில் அழைப்பு விடுக்கவில்லை. மொத்தம் 21 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios