தமிழகத்தில் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் இன்று ஆலங்கட்டி மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

வட கிழக்கு வங்கக்க்டல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் இன்று ஆலங்கட்டிமழை பெய்துள்ளது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி, நாச்சி குப்பம், மாதேபள்ளி, நேரலகிரி , கோனே கவுண்டனூர், உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெதுள்ளது.

நீலகிரிமாவட்டம் குன்னூர் மற்றம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஐ தராபாத்தின் சில பகுதிகளிலும் ஆலங்கட்டிமழை பெய்துள்ளது. 

இன்று பெய்த ஆலங்கட்டி மழையை விவசாயிகளும், பொது மக்களும் வரவேற்றுள்ளனர்