ஜல்லிக்கட்டுக்கு எதிராக கொதித்தெழுந்த இளைஞர்களின் போராட்டம் பெரும் தீயாக எழுந்துள்ளது. அலங்கா நல்லூரில் 16 மணி நேரமாக அணையா ஜோதியாக எரியும் தீயாக போராட்டம் தொடர்கிறது.

தமிழக விவசாயத்தை அழிக்கும் , பாரம்பரிய காளை இனங்களை அழிக்க, பால் கொள்முதல் துறையை கைப்பற்ற அமெரிக்க ஆதரவு பீட்டா நிறுவனத்தின் நுணுக்கமான திட்டம் தான் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற கோஷம்.

பல ஆயிரம் கோடிகள் புரளும் இந்த அமைப்பு எளிதாக உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது. இவர்களின் ஆட்களே விலங்குகள் நல வாரியத்தில் நியமிக்கப்பட்டனர், இவர்களுக்கு தாளம் போட்ட மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்தது.

மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடைபெறவில்லை.இதை கண்டித்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர்.

அவனியாபுரத்தில் பற்றிய தீ, பாளமேட்டில் பெரிதாகி அலங்காநல்லூரில் அடங்காநல்லூராக பெருந்தியாக பற்றி எரிகிறது.

அலங்கா நல்லூரில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் மாணவர்கள் கடும் தடியடி அடக்குமுறைக்கு பின்னரும் வாடிவாசல் வழியாக காளைகளை திறந்துவிட வேண்டும் என்று அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே போராட்டம் நடத்தி வருகின்ற்னர்.

நூற்றுக்கணக்கில் திரண்ட இளைஞர்களை மாணவர்களை பெண்களை ஆரமப்த்தில் மிரட்டி பார்த்த காவல்துறை பின்னர் பயந்து போய் மிரட்சியுடன் பார்க்க ஆரம்பித்தது. இதன் விளைவு அவர்களை சுற்றி அரண் அமைத்து பாதுகாத்து வருகின்றனர். 

அவர்களுக்கு உணவு கூட அளிக்க விடாமல் பாதுகாத்து? வருகின்றனர். எங்கிருந்தோ வந்த படித்த மாணவர்கள் இளைஞர்கள் தமது பண்பாடு கலாச்சாரத்துக்காக போராடுவதை கண்டதும் உள்ளூர் மக்கள் உடனடியாக அங்கு திரண்டு அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் சேர்ந்து கொண்டனர். 

உள்ளூர் பெண்கள் அவர்களுடன் தொடர்ந்து இருக்கின்ற்னர். இந்த போராட்ட தகவல் தீயாக வலைதளங்களில் பரவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்காததால் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.