உட்கட்சி பஞ்சாயத்துகள் உச்சம் சென்று வெடிக்கும் விவகாரங்களில் தமிழக காங்கிரஸிடம் இந்த தேசத்தின் மற்ற கட்சிகள் பிச்சை எடுக்க வேண்டும். தேர்தலில் நிற்கும் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு, எதிர்க்கட்சியினரை சமாளிப்பதுதான் பெரிய சவால். ஆனால் காங்கிரஸில் மட்டும் உட்கட்சியினர் தோண்டும் குழிகளை மூடுவதும், தாவிக் கடப்பதும்தான் மிகப்பெரிய சவாலே. கரூர் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணி, அந்த தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சீட் கேட்கையில் மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியது உட்கட்சியில். பல முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு தோற்ற ஜோதிமணிக்கு இனி வாய்ப்பே கொடுக்க கூடாது. செல்வாக்கு இல்லாத அவரை ஏன் மீண்டும் மீண்டும் தேர்வு செய்கிறீர்கள்? என்று கரூர் காங்கிரஸின் சில டீமினர் குதித்தனர். 

ஆனால் ராகுலின் சிபாரிசில் சீட் தட்டினார் ஜோதிமணி. ஜெயிக்கவும் செய்தார்.  தேர்தலில் நின்றபோது ‘உங்கள் பிரச்னைக்காக என்னை தேடியெல்லாம் வரவேண்டாம். எந்த நேரத்திலும் ஜஸ்ட் ஒரு போன் பண்ணுங்கள். நானே வந்து தீர்ப்பேன் உங்கள் பிரச்னைகளை’ என்றார். 
ஆனால் கடந்த சில வாரங்களாக ஜோதிமணி போனை எடுப்பதேயில்லையாம். இந்த நிலையில் கரூரை சேர்ந்த அட்வோகேட்டான தமிழ் ராஜேந்திரன் என்பவர் ’கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் போன் பண்ணினால் ஜோதிமணி எம்.பி. போனை எடுப்பதில்லை. மக்களுக்கு மன உளைச்சலை தரும் அவர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப் போகிறேன்’ என்று கொதிக்கிறார். 
இந்த விஷயத்தில் கரூர் மாவட்ட காங்கிரஸாவது ஜோதிமணிக்கு சப்போர்ட் செய்யும்! என்று பார்த்தால் அதன் பொதுச்செயலாளர் பாலசந்தர், அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஆகியோர்“பொதுவெளியில் மக்களிடம் நடித்து ஓட்டுக்களை வாங்கி எம்.பி.யாகிவிட்ட ஜோதிமணி, இன்று மக்களின் நலனில் அலட்சியம் காட்டுகிறார். 

தேர்தலுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளான எங்ககிட்ட நேர்லேயும், போன்லேயும் பேசி பிரசாரத்துக்கு அழைச்சார், வெற்றிக்கு உதவி கேட்டார். ஆனா எம்.பி.யான பிறகு இன்னைக்கு எங்களை மதிக்கிறதுமில்லை, போன் பண்ணினால் பேசுறதும் இல்லை. கால் அட்டெண்ட் பண்றதே இல்லை. அவருக்கு போன் பண்ணி அவமானப்பட வேண்டாமுன்னு சொல்லி நானெல்லாம் அவருக்கு போன் பண்றதையே நிறுத்திட்டேன்.
கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா அந்தம்மாவுக்கு. யாரைக் கேட்டாலும் ‘நான் நூறுதடவை போன் பண்ணினேன், நான் நாலு மாசம் போண் பண்ணுறேன் ஆனா அட்டெண்ட் பண்ண மாட்டேங்கிறாங்க சகோதரி ஜோதிமணி’ அப்படிங்கிறாங்க.

 

தலைக்கனத்துல ஆடுறாங்க  அவங்க. கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் எத்தனை ஆயிரம் கால் பண்ணினாலும் அது வெறும் மிஸ்டுகாலாக மட்டுமே போகுமே தவிர, ஜோதிமணி அட்டெண்ட் பண்ணும் காலாக அது இருக்காது.” என்கின்றனர் மேற்படி விவகாரத்தை எழுதியிருக்கும் பிரபல அரசியல் வாரம் இருமுறை புத்தகம், தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரியிடம் இது பற்றி கேட்டதற்கு “ஜோதிமணி போனை எடுத்துப் பேசணும்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா? நான் போன் பண்ணினா எடுக்கிறாரே.” என்று சொல்லியிருக்கிறார். மாநில தலைவர் இப்படி  சப்போர்ட் பண்ணுவதை ‘மிஸ்டு கால் ஜோதிமணிக்கு சப்போர்ட் பண்றார் மாநில தலைவர்’ என்று காங்கிரஸுக்குள் கலாட்டா பஞ்சாயத்து வெடித்துள்ளது. அவ்வ்வ்............!