ஆட்டத்தை ஆரம்பித்த அழகிரி...! வீடியோ வெளியிட்டு அதிரடி...! 

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில், அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ பதிவுடன், தற்போது புதிய கருத்தை சொல்ல விரும்பும் அரசியல் வாதியாகவும், அரசியல் களத்தில் மீண்டும் கலக்க வரும் ஹீரோ போன்ற வாசகங்கள் அடங்கிய பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.


 
"இனி ஆட்டத்தை பாருடா...
அதிரடியை பாருடா....
தடுக்குறவன் யாருடா.,....வேணா ...சொன்னா கேளுடா.....வேற மாரி ஆளுடா ....அண்ண தொட்டதெல்லாம் தூள்டா.....
ரசிகனை ரசிக்கும் தலைவா...வெற்றிமுகம் வா......
சிங்கத் தமிழா....சங்கத்தமிழா...உச்சம் தொட வா......
மக்கள் செல்வன் வா..... இன்னும் உச்சம் தொட வா......

 

என்ற பாடல் வரிகளுடன் தொடங்குகிறது. இந்த வீடியோ காட்சிகள் திமுக வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி இறந்து இன்றுடன் நான்கு நாட்களே ஆன நிலையில் தற்போது இது போன்ற வீடியோவை அழகிரி வெளியிட்டு உள்ளதால், தொண்டர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர் 

கட்சியில் மிக பெரிய பொறுப்பு அழகிரிக்கு வழங்க வேண்டும் என்ற பேச்சு வார்த்தை ஏற்கனவே அடிப்பட்ட நிலையில், பொறுப்பு வழங்குவது குறித்து கட்சியிலிருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, அழகிரி இந்த பாடலை வெளியிட்டு உள்ளார் 

இந்த தருணத்தில், இன்று செயல் தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தில், திமுக முக்கிய நபர்களான, கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோருடன் ஸ்டாலின் திடீரென ஆலோசனை நடத்தி வருகிறார் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.