Akshara who came to Kejriwal arvind meets with Kamal

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலின் வீட்டில் சந்தித்து பேசி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சற்று தீவிரமாக அரசியல் பேசியும் அரசை விமர்சித்தும் வந்த நடிகர் கமல் ஹாசன், அண்மைக்காலமாக அரசுக்கு எதிரான தனது கருத்துக்களை டுவிட்டரிலும் பேட்டியாகவும் கொடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

அவரது அரசியல் பிரவேசம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், தனிக்கட்சிதான் தொடங்குவேன் என்றும் எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என்றும் கூறிவருகிறார் கமல்ஹாசன்.

கமல் எப்போது அரசியலுக்கு வருகிறார்? தனிக்கட்சி தொடங்குவாரா? என பல கேள்விகள் மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியில் கமல் இணையப் போவதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் அதை கமல்ஹாசன் மறுத்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசன் வீட்டில் சந்தித்து பேசி வருகிறார். 

முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை, நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்சரா ஹாசன், வரவேற்றார்.

சென்னை வந்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், நடிகர் கமல் ஹாசனை சந்திக்க உள்ளார்.