akilesh going to resign his cm post

அகிலேஷ் அதிர்ச்சி தோல்வி...வீதிக்கு வந்த குடும்ப சண்டை ....

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாட்டின் அதிக எம் எல் ஏக்களை கொண்ட மாநிலத்தின் 5 ஆண்டுகள் மெஜாரிட்டி ஆட்சி நடத்தியவர் உபி யின் அகிலேஷ் யாதவ். மொத்தமுள்ள 4௦3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முதலில் அறிவித்துவிட்டு பின்னர் காங்கிரசுடன் கை கோர்த்த தற்போதைய முதலமைசாரான அகிலேஷ் யாதவ் , முபாராக்பூர் தொகுதியில் போட்டியிட்டார் .

தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலம்ஷா விடம் வெறும் 688 வாக்கு வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தார் அகிலேஷ். இவருக்கு எதிராக போட்டியிட்ட ஆலம்ஷா பெற்ற வாக்குகள் 70,705 ஆகும்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக , அகிலேஷ் யாதவ் மற்றும் தன் சித்தப்பா சிவபால் சிங்கும், முலாயம் சிங்க் யாதவிடம் சண்டையிட்டு தனியே பிரிந்து வந்து ஆட்சி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில், தற்போது நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உ பி யை பொறுத்தவரையில், அகிலேஷ் யாதவ் படு தோல்வி அடைந்தார். தங்கள் குடும்ப சண்டையால் அகிலேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்து,பதவியை இழக்க நேரிட்டுள்ளது