மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அநரில் வந்து அஞ்சலி செலுத்துவதற்காக இன்று பிற்பகல் மதுரை வருகிறார்.

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்  மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.  நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் எம்.எல்.ஏ போஸுக்கு மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது.  அவரது உடலுக்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று நண்பகல் 12 மணிக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செலலூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உடலுக்கு பிற்பகல் 1 மணிக்கு முதலமைச்சர்  பழனிசாமி நேரில் சென்று  அஞ்சலி செலுத்துகிறார்.  

அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக ஏ.கே.போஸ் தேர்வானவர். இவர் கடந்த 2006,2011, -ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். 

ஆனால் அவர் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே உடல் நலக்குறைவால் காலமானர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.