ரஜினிகாந்த் மீது அதீத பற்று கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனைக்காக திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ரஜினியும் நன்றி சொன்னதோடு நீங்கள் இல்லாமல் நான் இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித் போன் செய்து தனிப்பட்ட முறையில் தனது வாழ்த்தை ரஜினிக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 30 நிமிடங்கள் அவர்கள் உரையாடியதாக இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அப்போது ரஜினியில் அரசியல் வருகி பற்றியும் அஜித் கேட்டறிந்துள்ளார்.

ரஜினியிடம் மனம் விட்டு பேசிய அஜித் குமார் தன்னால் முடிந்த அளவிற்கு எந்த வகையிலாவது தங்களுக்கு உதவுவேன் என உறுதி அளித்துள்ளார். அஜித் பெயரை அதிமுக- திமுக- பாஜகவினர் அவ்வப்போது தங்களது அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு வந்தனர். அதற்கு அஜித்தும் விளக்கமளித்து வந்தார். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் எந்த வகையிலாவது உதவுவேன் என அஜித் கூறியுள்ளது பிற கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. காரணம், அஜித் ரசிகர் மன்றத்தை களைத்தாலும் அவரது ரசிகர் பட்டாளம் அவருக்காக கட்டுக் கோப்புடன் இருந்து வருகிறது.