திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால், அதிமுகவின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகரில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குத்துச்சண்டை என்றால் தனக்கு மிகுந்த ஆர்வம் என கூறினார். தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால், அதிமுகவின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும்.

இதையும் படிங்க;- மனைவியின் தம்பி பொண்டாட்டி மீது அடங்காத காமவெறி... கள்ளக்காதலனுடன் கணவரை போட்டுத்தள்ளி ஆத்திரம்..!

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை. நடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் இல்லை. அஜித் தல, ரஜினி மலை. விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.390 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது.

சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையில் அரசியல் தலையீடு இருந்ததாக பலரும் கூறிவந்தனர். இந்நிலையில், விஜய்யிடம் நடந்த வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையிடும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.