எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பதிலாக எய்ட்ஸ் மருத்துவமனை என்று அமைச்சர் செல்லூர் ராஜு மேடையில் பேசியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மதுரையில் உலக தமிழ்சங்க வளாகத்தில் நேற்று மாலை நடந்த விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வருகின்றனர். 2014, 2015-ம் ஆண்டுகளஇல் இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருகை தந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. 

முதல்வர் எடப்படாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை மதுரைக்கு கொண்டுவந்துள்ளார். அதுமாதிரியான திட்டங்களில் முக்கியமானதுதான் எய்ட்ஸ் மருத்துமனை. நாம் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் ரூ.1,500 கோடியில் எய்ட்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது என்று தெரிவி்த்தார்.

 அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த பேச்சைக் கேட்ட தொண்டர்களும், மக்களும் மிரண்டுவிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள், அது எய்ட்ஸ் மருத்துவமனை அல்ல, எய்ம்ஸ் மருத்துவமனை என்று அமைச்சரின் காதில் கூறினார்கள். பின்னர் திருத்திக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை என்று தெரிவித்தார்.