Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவை வழிநடத்தப்போவது ஒரு பெண் தான்... அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK Will lead woman...minister sellur raju
Author
Madurai, First Published Oct 14, 2018, 11:55 AM IST

எதிர்காலத்தில் அதிமுகவில் இருந்து ஒரு பெண் முதல்வராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அதிமுக மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ உள்ளாட்சித் தேர்தலில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டியிடும் வகையில் பெண்களுக்கு 50 சதவிகிதம் வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுகவிற்கு எதிர்காலத்தில் பெண்களில் ஒருவர் தலைமை ஏற்கும் காலம் வரும். அதிமுகவை வழிநடத்தபோகிறவர்கள் பெண்கள்தான்” என்று பேசினார்.

 AIADMK Will lead woman...minister sellur raju

மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதவி விலக வேண்டுமென்றால் நாட்டில் யாரும் ஆட்சி செய்ய முடியாது என்றும் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் பெண் தலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தவே அவ்வாறு கூறினேன் என மழுப்பலான பதிலை கூறியுள்ளார். AIADMK Will lead woman...minister sellur raju

பெண் முதல்வர் என்று நான் கூறவில்லை. ஊடகங்கள் பெரிதுபடுத்தக் கூடாது என்று தெரிவித்தார். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ, சசிகலா எப்போதும் எனக்கு சின்னம்மா தான். ஜெயலலிதாவுக்கு 40 ஆண்டுகள் அவர் அரணாக இருந்துள்ளார்” என்று கூறியிருந்தார்.  இந்நிலையில், அதிமுகவிற்கு எதிர்காலத்தில் பெண் தலைமை தாங்குவார் என அவர் கூறியிருப்பது சசிகலாவை மனதில் வைத்தே கூறப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios