Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் அஸ்திரத்தை கையில் எடுக்கும் அதிமுக... அதிரடி இ.பி.எஸ் - ஓபிஎஸ்.. முதல்வரின் ரியாக்ஷன்..?

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதிமுகவுக்கு எதிராக  திமுக பயன்படுத்திய அஸ்திரத்தை தற்போது அதிமுக கையில் எடுத்து இருக்கிறது.

Aiadmk vs dmk protest announcement eps ops against mk stalin dmk tn govt
Author
Tamilnadu, First Published Jan 20, 2022, 6:49 AM IST

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தாலுக்கா அலுவலகங்கள் முன் விவசாயிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Aiadmk vs dmk protest announcement eps ops against mk stalin dmk tn govt

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த கால தவறுகளில் இருந்து, ஓரளவுக்காவது பாடம் படித்து திமுக-வின் புதிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி நடத்துவார் என்று மக்கள் மத்தியில் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் முற்றிலுமாகத் தகர்ந்து போய்விட்டது. தமிழ் நாட்டில் விவசாயப் பெருங்குடி மக்கள் இயற்கை சீற்றத்தைத் தாண்டியும், ஒரு சாகுபடி ஆண்டில் நம்பிக்கைக்குரிய நெற்பயிராக விளங்கும் என்ற எதிர்பார்ப்போடு, செய்யும் வேளாண்மைதான் சம்பா மற்றும் தாளடி விளைச்சல். 

ஆனால், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களிலும், அதை ஒட்டியுள்ள வேறு சில மாவட்டங்களிலும், டிசம்பர் மாதத்திலும், ஜனவரி மாதத் தொடக்கத்திலும் பெய்த கன மழை, அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் எதிர்காலத்தைக் கோள்விக்குறியாக்கி இருக்கிறது. வடகிழக்கு பருவ மழைக் காலம் முடிந்த பிறகும், எதிர்பாராத வகையில் பெய்த கனமழையால் வயல்வெளியெங்கும் குளம் போல் தண்ணீர் தேங்கி இருந்ததன் காரணமாக, விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களை அறுக்க முடியவில்லை. 

Aiadmk vs dmk protest announcement eps ops against mk stalin dmk tn govt

மழைக்கு முன் அறுத்து களத்திற்குக் கொண்டு வந்து போரடித்து மூட்டைகளாகக் கட்டப்பட்ட, பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தமிழ் நாடு அரசால் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாததன் காரணமாக, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியிலும், மற்ற நெல் சேமிப்பு இடங்களிலும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டன. கடந்த ஆண்டு குறுவை பயிரும் தங்களுக்கு எந்தப் பலனும் அளிக்காத நிலையில், சம்பா மற்றும் தாளடி சாகுபடியை எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகள் இப்பொழுது பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி, கடனாளிகளாக மாறி இருக்கிறார்கள். 

எதிர்காலம் குறித்த பேரச்சம் அவர்களிடம் நிலவுகிறது. 2021-ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது, இதுபோன்ற பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததன் காரணமாக, டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதை சுட்டிக் காட்டியும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைத்து உரிய ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்தி, கழகத்தின் சார்பில் ஏற்கெனவே அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். ஆனால், விடியா திமுக அரசு இதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

Aiadmk vs dmk protest announcement eps ops against mk stalin dmk tn govt

இதன் காரணமாக, விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெருமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்காத விடியா திமுக அரசைக் கண்டித்தும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, அவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, அவர்களுக்கு பாருட்டு, அவர்களுக்கு உரிய நிவாரணத் உரிய நிவாரணத் உரிய நிவாரணத் தொகையை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும், வலியுறுத்தியும்,விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து, விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து, விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து, வருகின்ற 22.1.2022 - சனிக் கிழமை காலை 10.30 மணியளவில் டெல்டா மாவட்டங்களில் தாலுக்கா அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aiadmk vs dmk protest announcement eps ops against mk stalin dmk tn govt

கடந்த அதிமுக ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் முதல் ஸ்டெர்லைட் வரை திமுக வாரம் ஒரு போராட்டம் என்ற ரீதியில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது. இது ஒருகட்டத்தில் மக்களுக்கும் சரி, ஏன் திமுக தொண்டர்களுக்கே ஒருவித சலுப்பை உண்டாக்கியது.இருப்பினும் அது திமுக என்ற ஒரு கட்சியையும், தொண்டர்களையும் தொடர்ந்து சுறுசுறுப்பாக வைக்க திமுகவுக்கு கைகொடுத்தது.

Aiadmk vs dmk protest announcement eps ops against mk stalin dmk tn govt

தற்போது அதிமுகவும் அந்த அஸ்திரத்தையே கையில் எடுத்து இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து ரெய்டு நடந்து வரும் நிலையில், திமுகவுக்கு எதிரான பலமான அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. இது பொதுமக்கள் இடையேயும், அதிமுக கட்சியினர் இடையேயும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios