தொண்டர்கள் என்னுடன் தான் உள்ளனர்..! இபிஎஸ் அணிக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இபிஎஸ் அணிக்கு மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்ப்பு
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக தற்போது ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாக பிளவு பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும், அவர் மீது தண்ணீர் பாட்டில், மற்றும் ஓபிஎஸ் சென்ற வாகனத்தின் டயரில் பஞ்சர் செய்யப்பட்ட நிகழ்வும் நடைபெற்றதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து குடியரசு தலைவர் வேட்பு மனு தாக்கல் நிகழ்விற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ் நேற்று சென்னை திரும்பினார். இதனையடுத்து இன்று மதுரை வந்த ஓபிஎஸ்க்கு விமான நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். அப்போது இபிஎஸ்க்கு எதிராக முழுக்கமும், ஓபிஎஸ்க்கு ஆதரவாக முழக்கத்தையும் தொண்டர்கள் எழுப்பினர். இதனையடுத்து தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு செல்லும் ஓபிஎஸ்க்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
திமுகவிற்கு இலவச சட்ட ஆலோசனை தருபவர் கி.வீரமணி..! திராவிடர் கழகத்தை நக்கல் செய்த வி.பி.துரைசாமி
மக்கள் தண்டனை வழங்குவார்கள்
மதுரை டோல்கேட், உசிலம்பட்டி தேவர் சிலை, ஆண்டிபட்டி கணவாய், ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை, தேனி நேரு சிலை மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களில் வரவேற்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்ற நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்,50 ஆண்டுகால இந்த இயக்கம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. அதில் 30 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராகவும் நல்லாட்சி நடத்தியுள்ளனர். இன்றைக்கு அதிமுகவில் உள்ள அசாதாரண சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதோ அவர்களுக்கு கூடிய விரைவில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள், அவர்கள் செய்த தவறுக்கு தொண்டர்கள் உறுதியான தண்டனையை வழங்குவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
இதையும் படியுங்கள்