Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவை அலறவிடும் திமுக.. ஆட்சி உறுதியானதுமே எடப்பாடியின் முக்கிய விஸ்வாசியை தட்டித்தூக்கிய உதயநிதி..!

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்த சம்பவம் ஓபிஎஸ், இபிஎஸை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

AIADMK vishnuprabu joins DMK...OPS, EPS Shock
Author
Tamil Nadu, First Published May 6, 2021, 2:47 PM IST

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்த சம்பவம் ஓபிஎஸ், இபிஎஸை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரபு. கடந்தாண்டு கூட அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று யாகம் நடத்தினார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்  கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சீட் மறுக்கப்பட்டது. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்தார். 

AIADMK vishnuprabu joins DMK...OPS, EPS Shock

இந்நிலையில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாகவே அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு அக்கட்சியில் இருந்து விலகி உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

AIADMK vishnuprabu joins DMK...OPS, EPS Shock

இதுகுறித்து விஷ்ணுபிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுக எந்த நோக்கத்தோடு துவங்கப்பட்டதோ அது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு  திசைமாறி இன்று மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களது கடும்பத்தினர் கட்டுபாட்டிற்குள் சென்றுவிட்டது. மேலும், இளைஞர்களுக்கு எந்தவிதமாக வாய்ப்புக்களும் வழங்கப்படுவதில்லை. மக்கள் பணி ஆற்றுவதற்கும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. 2021 தேர்தல் தோல்விக்கு பிறகு இவர்கள் தங்களது தவறுகளை சரி செய்வதாகவும் தெரியவில்லை. ஆகவே, மாண்புமிகு அம்மா அவர்கள். 2010ல் யாருடைய சிபாரிசுமின்றி நேரடியாக எனக்கு வழங்கிய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பதவியை நான் கனத்த இதயத்தோடு ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios