தூத்துக்குடி, விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக வேட்பாளரான கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியும் அடங்கும். 

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி கனிமொழியை எதிர்த்து தமிழிசை களமிறங்க உள்ளார். தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக சின்னப்பன் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் நேற்று விளாத்திகுளம் பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக வேட்பாளராக சின்னப்பன் பரபரப்புரையை தொடங்கினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் சின்னப்பன் பேசும் போது, தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடனும், பிரதமராக இருந்து நாட்டை கட்டி காக்கின்ற மோடியின் ஆசி பெற்ற நமது கூட்டணி வேட்பாளர் அன்பு சகோதரி கனிமொழி வாக்களிக்க வேண்டும் என கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின் சுதாரித்து கொண்ட சின்னப்பன், தமிழிசை சவுந்திரராஜன் எனக்கூறினார்.