Asianet News TamilAsianet News Tamil

10 சீட்டுகளை குறைத்த அதிமுக... பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இதுதான்..!

கடந்த தேர்தலில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எனவே இந்த தேர்தலில் கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

AIADMK reduced 10 seats ... These are the constituencies allotted to PMK
Author
Tamil Nadu, First Published Feb 17, 2021, 12:22 PM IST

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. தேர்தலை சந்திக்கிறது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததால் கூட்டணியை உறுதிப்படுத்தி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது.AIADMK reduced 10 seats ... These are the constituencies allotted to PMK
 
தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிய வந்துள்ளது. பா.ம.க.வுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல் பா.ம.க. போட்டியிட போகும் உத்தேச பட்டியலும் வெளியாகி இருக்கிறது. மாதவரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி, ஜெயங்கொண்டம், தருமபுரி, திட்டக்குடி (தனி), பொன்னகரம், திருக்கோவிலூர், குறிஞ்சிப்பாடி, அணைக்கட்டு, பூந்தமல்லி (தனி), கீழ் பென்னாத்தூர், பரமத்திவேலூர், திருப்பத்தூர் (வேலூர்), அரவக்குறிச்சி, பாபநாசம், வந்தவாசி (தனி), மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் போட்டி யிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.AIADMK reduced 10 seats ... These are the constituencies allotted to PMK

கடந்த தேர்தலில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எனவே இந்த தேர்தலில் கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios