சென்னை தலைமைச்செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி,  சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடிய ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், விழா நிகழ்ச்சி முடிந்ததும் தலைமைச் செயலகத்தில் திடீரென அவசரமாக 10க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி,  சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக கடந்த ஒரு வார காலமாகவே அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது. அமைச்சர்கள் தொடர்ந்து இருவேறு கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.  

அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-ஆவது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனிடையே, அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளே நிலையில் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது, முதல்வர் வேட்பாளர் பிரச்சனையை எவ்வாறு கையால்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக முதற்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.