‘கசாப்பு கடை ஓகே.! காமுகனை நம்பித்தான் போகக் கூடாது - ஜெயக்குமாரை வெளுத்து வாங்கிய புகழேந்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்திக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

aiadmk ops supporter pugalendhi challenge former minister jayakumar

4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பற்றி கடுமையாக விமர்சித்தார். 

அவர் பேசியதாவது, , ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஓபிஎஸ் பேசுவதாக விமர்சித்தார். தென்னரசு என்ற பெயரையே சொல்ல வலிக்கிறது. இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது என்பது முரண்பாடானது. அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என்று கூறினார்.

aiadmk ops supporter pugalendhi challenge former minister jayakumar

இதற்கு பதில் அளித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஆன புகழேந்தி. ‘கசாப்பு கடையக்காரரைக்கூட நம்பி போகலாம். ஆனால், காமுகனை நம்பித்தான் போகக் கூடாது . ஜெயக்குமாரை பார்த்தால் பெண்கள் பயந்து ஓடுகிறார்கள். இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் தோல்வியை தழுவினார். 

இரட்டை இலை சின்னத்தை வைத்து கட்சியை நாசம் செய்து விட்டார் . இப்போது ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டு வெற்றி வராவிட்டால் அதிமுக அலுவலகத்தின் சாவியை ஓ.பன்னீர்செல்வத்தின் காலடியில் ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடியாக பேசினார் புகழேந்தி.

இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

இதையும் படிங்க..திமுக அறக்கட்டளை நிதியை வச்சு பேனா சின்னத்தை எங்க வேணாலும் வைங்க.!! திமுகவுக்கு விஜயபிரபாகரன் கொடுத்த அட்வைஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios