அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம்.  

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சென்ற பின் 2017 செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தங்களை நீக்கிய அதிமுக பொதுக்குழு செல்லாது என அற்விக்கக்கோரி தினகரனும், சசிகலாவும் மனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா மனுவை விசாரணைக்கு எடுக்க அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கிலிருந்து டி.டி.வி.தினகரன் விலகியதால் அவரது பெயரை நீக்கி திருத்த மனு தாக்கல் செய்தார் சசிகலா.