கோவைக்கு வருகை தந்த பிரதமர் மோடியின் காலில் அதிமுக எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்தரநாத்குமார், முன்னாள் எம்.பி.நவதீதகிருஷ்ணன் விழுந்து வணங்கினர். 

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள அரங்கில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா, முடிந்த திட்டங்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு ஆகியவை நேற்று நடைபெற்றன. இதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலை வகித்தார்.

அப்போது, பிரதமர் மோடியை வரவேற்க கொண்டிருந்த, தேனி எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மற்றும் முன்னாள் எம்.பி.நவதீதகிருஷ்ணன் ஆகியோர் பிரதமரின் காலில் விழுந்தனர்.  இவர்களை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த இருவரும் மோடி காலில் விழத்தொடங்கினர். உடனே மோடி தடுத்துவிட்டார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது  தேனி பிரச்சார கூட்டத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.