மத்தியில் காங்கிரசா? பாஜகவா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அந்த கட்சி காரர்களைவிட அதித ஆர்வத்தில் இருப்பவர்கள் அதிமுகவும், திமுகவினரும் தான். இதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. எடப்பாடி ஆட்சியை ஆசைக்க முடியாததற்கு மோடியின் ஆதரவும் பாஜகவின் ஆதரவும் அமோகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

மத்திய அரசின் ஆதரவு அதிமுகவுக்கு பெருமளவில் இருப்பதால் தான் திமுகவின் அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் பாஜக மற்றும் மோடியை கடவுளாக பார்கிறார்களாம் ஆளும் கட்சியில் தற்போது பதவி சுகத்தை அனுபவித்து வருபவர்கள். இது ஒருபுறம் இருக்க எதிரணியான திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை பொறுத்த வரை எப்படியாவது காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிடாத அரசல் புரசலாக அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்று விடமாட்டார்களா என்ற கோணத்தில் ஆர்வத்தோடு பார்த்து வருகிறார்கள்.

 

மோடியா? ராகுலா? ராகுல் வெற்றி பெற்றால் தன்னிச்சையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவார்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடித்துவிடலாம் என்பது திமுகவின் கணக்கு. மோடி வெற்றி பெற்றால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் அதிருப்பதியாளர்களை கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து கொடுத்து சரிகட்டிவிடலாம் என்பது ஆளும் கட்சியின் கணக்காக உள்ளது. 

இந்த நிலையில் தான் பிரியாங்காந்தியும் மற்ற காங்கிரஸ் தலைவரும் கருத்து கணிப்பு எல்லாம் பொய் நிச்சயம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். போதாத குறைக்கு சந்திரபாபுநாயு, மம்தா உள்ளிட்டவர்கள் எப்பாடு பட்டாவது அல்லது குட்டிக்காணம் அடித்தாவது மோடியை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.  

இதற்காக சாம, பேத, தான, தண்ட முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். அதாவது எதிரும் புதிருமாக உள்ள மம்தாவையும், கம்யூனிஸ்டை சேர்ப்பது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரிகளான மாயாவதி முலாயம் சிங் ஆட்சிக்குள் சேர்ப்பது என இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் காங்கிரஸ் ஆட்சியமைப்பது சாத்தியம் என அடித்து கூறுகிறார்களால் காங்கிரஸ் நிர்வாகிகள். காங்கிரஸ் ஆட்சியமைத்துவிட்டால் அதிமுகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இனி பாஜகவின் தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமா என்ற பயப்பட தேவையில்லை என்று கருதுகின்றனர்.