நேருக்கு நேர் விவாதத்திற்கு தயார்: அமைச்சர் மூர்த்திக்கு ஆர்.பி. அழைப்பு
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வணிக வரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன், தற்போது நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா என்று அமைச்சர் மூர்த்திக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமணம் குறித்து பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “அமைச்சர் மூர்த்தி அரசியல் நாகரீகம் இல்லாமல் தரம் தாழ்ந்து பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல, 4ம் தர மனிதரைப் போல நீ,போ,வா என்று அமைச்சர் பேசி உள்ளார்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு, பேசுவதற்கு தார்மீக கடமை உண்டு, நீங்கள் நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது. நீங்களே மூன்று கோடி என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள்.
மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறப்படுகிறது, அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை, மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம் கேட்டால் நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
விளம்பரம் வேண்டுமானால் படங்களில் நடிக்கலாம்: உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு டோஸ்
எங்கள் ஆட்சியில் கனிமவளத் துறை, வணிகவரித்துறையில் நடைபெற்ற புள்ளி விவரங்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க நான் தயார். கடந்த ஒன்னறை ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா' கடந்த நான்கு ஆண்டுகாலத்தில் எடப்பாடியார் அனைவரையும் அரவணைத்து சென்றார். எடப்பாடியாரிடம் உதவி கேட்காதவர்கள் யாரும் கிடையாது,
அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி எடப்பாடியார் கூறியது தவறு என்றால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். ஆனால் 4ம்தர மனிதரைப் போல் அமைச்சர் பேசக்கூடாது, நாங்கள் எதற்கும் பின்வாங்க போகவில்லை,
எதிர்க்கட்சி தலைவருக்கு யாரும் எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தலைவரை போல் குறிப்பு எழுதி பேசுபவர் அல்ல. குறிப்பு இல்லாமல் 5 மணி நேரம் கூட எடப்பாடியார் பேசுவார். அமைச்சர் மூர்த்தி கனிம வளத்தை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சேவை ஆற்றுனீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் பேசினால் உங்களை பற்றி வெட்ட வெளியில் பேச தயங்க மாட்டோம். அதற்காக நீங்கள் பழி வாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்தாலும் அதற்கு அஞ்ச மாட்டோம்.
மக்களே அலர்ட் !! இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை அமல்..
மதுரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரை வைத்து 120 ஜோடி ஏழை, எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம். ஆனால் நீங்கள் முதலமைச்சரை அழைத்து உங்கள் வீட்டு திருமணத்தை நடத்தி உள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.