நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ குமரகுருவிடம் நேரில் சென்று முதல்வர் எடப்பாடி நலம் விசாரித்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமாக குமரகுரு இருந்து வருகிறார். இவர், இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் கட்டுவதற்காக, தேவஸ்தானம் போர்டுக்கு 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தார். இதற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்து விட்டது. அங்கு மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடியின் ஆதரவாளரும், நெருக்கிய நண்பரான குமரகுரு நேற்று முன்தினம் அதிகாலையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை குடும்பத்தினர் முண்டியபாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை நேரில்சென்று நலம் விசாரித்தார். ஆனால், அவரது உடல்நிலை ரொம்ப கவலைக்கிடமாக உள்ளதாக பல்வேறு வதந்திகள் எழுந்து வருகிறது.