கழக வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் எம்எல்ஏ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன். இவர் இந்த முறையும் போட்டியிட அதிமுகவில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரன் என்பவருக்கு அதிமுக வாய்ப்பு அளித்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ சந்திரசேகரன், தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரனை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவ்ம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் , கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல், கழக வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் எம்எல்ஏ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
