அண்ணாமலை புலம்புவது ஏன்? அதிமேதாவி அமர்பிரசாத் ரெட்டி.. பாஜகவை போட்டு தாக்கும் அதிமுக எம்எல்ஏ..!
பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடப்பாடியின் போஸ்கர்களை கிழித்து எரித்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுய விளம்பரத்திற்காக தமிழக மக்களின் காவலர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் படத்தை கொளுத்தியதை வன்மையாக கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டிக்கிறோம் என அருண்மொழி தேவன் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் அடுத்தடுத்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திராவிட கட்சிகளை சார்ந்து தான் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்று அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருந்தது. மேலும், கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடப்பாடியின் போஸ்கர்களை கிழித்து எரித்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்எல்ஏவுமான அருண்மொழி தேவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அஇஅதிமுகவில் பலரால் மதிக்கப்படாத சிலரை பாஜகவில் சேர்த்த போது மகிழ்த்த அண்ணாமலை, தற்போது புலம்புவது ஏன்? அப்போது எல்லாம் அமர்பிரசாத் ரெட்டி எனும் அதிமேதாவி எங்கோ தலைமறைவாக இருந்தாரா?
கழகம் காத்த மாவீரன் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தினந்தோறும் கழகத்தில் இணைந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுபவரை தலைவராக ஏற்றுக் கொண்ட கோவில்பட்டியை சேர்ந்த 4 நபர்கள், அவர்களது தலைவர் வழியில் சுய விளம்பரத்திற்காக தமிழக மக்களின் காவலர் எங்கள் அண்ணன் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் படத்தை கொளுத்தியதை வன்மையாக கடலூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.