Asianet News TamilAsianet News Tamil

நீ என்ன .... புடுங்குற... தேர்தல் அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த அதிமுக அமைச்சர் வீடியோ..!

தொண்டாமுத்தூர் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியின் வாகனத்தின் மீது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

AIADMK minister video with inappropriate words at the polls ..!
Author
Tamil Nadu, First Published Apr 6, 2021, 3:32 PM IST

தமிழகம் முழுவதும் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியிலிருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.AIADMK minister video with inappropriate words at the polls ..!

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில், வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்த அவலநிலையும் ஏற்பட்டது. மேலும் தோல்வி பயத்தில் இருக்கும் அ.தி.மு.க, பா.ஜ.வினர் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க அமைச்சர் பெஞ்சமின் மதுரவாயல் அருகே இருக்கும் எம்.ஜி.ஆர் ஆதர்ஷ் பள்ளியில் வாக்களிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பெஞ்சமின் வாக்காளர்களைத் தகாத வார்த்தைகளாலும், சாதிரீதியாகவும் திட்டியுள்ளார்.தேர்தல் அதிகாரியை வரைமுறையின்றி பேசி இருக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.AIADMK minister video with inappropriate words at the polls ..!

இதையடுத்து அமைச்சர் பெஞ்சமினின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்து, பெஞ்சமினை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அமைச்சரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.penjamin

அதபோல், தொண்டாமுத்தூர் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியின் வாகனத்தின் மீது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் தோல்வி பயத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios