Asianet News TamilAsianet News Tamil

கருப்பு மாஸ்க் அணிந்து இபிஎஸ்யோடு சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்..! என்ன காரணம் தெரியுமா.?

சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி மக்கள் பிரச்சனையை எழுப்பும் போது ஊடகங்களுக்கு பேரவையின் நேரடி ஒளிபரப்பை வழங்காமல் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் போக்கை கண்டிக்கும் வகையில் கருப்பு முக்கவசம் அணிந்து சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்ததாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
 

AIADMK members came to the Assembly wearing black masks to condemn the DMK government
Author
First Published Apr 13, 2023, 11:56 AM IST | Last Updated Apr 13, 2023, 11:56 AM IST

சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சட்டசபை கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் நடைபெறும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு  அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.  இதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பதில் வழங்குவார்கள். இந்தநிலையில் திமுகவினர் தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக  சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதிலுரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனில் எதிர்கட்சிகளின் கோரிக்கையோ அல்லது எதிர்கட்சி தலைவர்கிளன் பேச்சுகளோ நேரடியாக ஒளிபரப்பப்படுவதில்லை. 

பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றது செல்லுமா.? 10 நாட்களுக்குள் முடிவு சொல்லுங்க- நீதிமன்றம் அதிரடி

AIADMK members came to the Assembly wearing black masks to condemn the DMK government

வெளிநடப்பு செய்த அதிமுக

இந்தநிலையில் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தின் போது இந்த பிரச்சனையை அதிமுகவினர் எழுப்பினர். அப்போது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லையென்று குற்றம்சாட்டப்பட்டது மேலும் இதனை கண்டித்து வெளிநடப்பு செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு முக கவசம் அணிந்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். இது தொடர்பாக அதிமுகவினர் கூறுகையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கும் ஜானநாயக விரோத போக்கு இருப்பதாக தெரிவித்தனர்.

AIADMK members came to the Assembly wearing black masks to condemn the DMK government

கருப்பு மாஸ்க் அணிந்த எடப்பாடி

மேலும் சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி மக்கள் பிரச்சனையை எழுப்பும் போது ஊடகங்களுக்கு பேரவையின் நேரடி ஒளிபரப்பை வழங்காமல் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் போக்கை கண்டிப்பதாகவும்,  மக்களை அச்சுறுத்தும் உருமாறிய 'ஒமைக்கிரான்' வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் விடியா அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும் கருப்பு முக கவசம் அணிந்திருப்பதாக தெரிவித்தனர். ஆளும் தி.மு.க-வினர் செய்யும் குற்றச்செயலை ஒருதலை பட்சமாக காவல் துறை நடவடிக்கைகள் எடுக்காமல் காலதாமதம் செய்யும், அரசின் விரோத போக்கை கண்டித்தும் முக கவசம் அணிந்துள்ளதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

மு.க. ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியல்..! வெளியிட நேரம் குறித்த அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios