Asianet News TamilAsianet News Tamil

ஆட்சி நீடிக்க இடைத்தேர்தல் வெற்றி முக்கியம்... இபிஎஸ், ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் ஆகையால் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

AIADMK Meeting of District Secretaries
Author
Chennai, First Published Dec 12, 2018, 10:51 AM IST

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் ஆகையால் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது. AIADMK Meeting of District Secretaries

இந்த கூட்டத்தில் ஜெயலலிதா இல்லாமல் தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 தொகுதியில் வெற்றிபெற்றால்தான் அதிமுக  ஆட்சியை தக்கவைக்க முடியும். இதனால் மாவட்ட செயலாளர்கள் தங்கள் முழு உழைப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது. 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலையொட்டி அல்லது முன்னாடியே இடைத்தேர்தல் வரலாம். தேர்தலை சந்திக்க அதிமுக  தயார். அதற்கான ஆலோசனை கூட்டம்தான் இன்று நடந்தது. பலவீனமாக இருப்பவர்கள் தான் 4 பேரை கூட்டணியில் சேர்ப்பார்கள். பலமாக உள்ளவர்கள் கூட்டணியில் சேரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பலமாக இருக்கிறோம் என்றார். AIADMK Meeting of District Secretaries

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளும் மக்களின் தீர்ப்பை காட்டுகிறது. தமிழகத்தில் ஒரே அலை என்பது அம்மாவின் அலை மட்டுமே. அதுவே தமிழகத்தின் நிலை. பிற மாநிலங்களில் மோடி அலை ஓய்ந்துவிட்டதா? என்பதை பா.ஜ.க. தலைமையிடம் தான் கேட்கவேண்டும் என கூறினார். டி.டி.வி.தினகரனுடன் எப்போதும் அதிமுக கூட்டணி வைக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios