பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான்.. அவங்களோடு சேர்ந்து போராட்டம் நடத்துவது நியாயமா? அமைச்சர் சிவசங்கர்..!

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன.

AIADMK is the cause of the problem... transport minister sivasankar tvk

அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிங்க;- Bus Strike: தமிழகத்தில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும்; போலீசார் குவிப்பு!

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்க கூட்டமைப்பின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். தங்கள் அமைப்பு பலத்தை காட்டுவதற்காக போராட்டத்தை அறிவித்தத கூட்டமைப்பின் தலைவர்கள் தற்போது அதனை கைவிட முடியாமல் தவிக்கின்றனர். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை. ஆனால், பொது மக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. 

இதையும் படிங்க;- பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! ஸ்ட்ரைக் பத்தி கவலை வேண்டாம்!தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்

அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது. 96 மாதங்களாக நிலுவைத்தொகை வழங்கவில்லை எனில் அது அதிமுக ஆட்சியில் நடந்ததுதான். அகவிலைப்படி தொகையை எடுத்து அதிமுக ஆட்சியில் வேறு செலவுகளை செய்துவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துவது பிரச்சனையை திசைதிருப்பும் செயல். அதிலும் குறிப்பாக இதற்கெல்லாம் யார் காரணமோ அந்த எடப்பாடி பழனிசாமி அணியோடு, அதிமுக தொழிற்சங்கத்தோடு சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தம் செய்வது மிகுந்த கவலைக்குரியது, கண்டனத்திற்குரியது என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios