Asianet News TamilAsianet News Tamil

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! ஸ்ட்ரைக் பத்தி கவலை வேண்டாம்!தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி கோட்டத்தை சார்ந்த பேருந்துகள் கீழ்கண்ட தட பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். 

Special buses will be run for Pongal Festivel.. Here is the full details of the temporary bus stands tvk
Author
First Published Jan 9, 2024, 8:26 AM IST

ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்;- பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,706 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,006 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 16ம் முதல் 18ம் வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,130 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,589 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க;- பொங்கல் விழா.. சென்னையில் இருந்து 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் அளித்த தகவல்!

Special buses will be run for Pongal Festivel.. Here is the full details of the temporary bus stands tvk

* மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் 

*  கலைஞர் கருணாநிதி நகர்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள்.

*  தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து TNSTC வழித்தட பேருந்துகள் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீங்கலாக).

* வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்

தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.

* பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம் 

பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.

* புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

இதர ஊர்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி கோட்டத்தை சார்ந்த பேருந்துகள் கீழ்கண்ட தட பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, செயங்கொண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துத் கழகத்தை சார்ந்த பேருந்துகள் பெங்களுர் மற்றும் ECR மார்க்கமாக இயக்கப்படும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி.

இதையும் படிங்க;-  அதிமுக அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க பேருந்துகளை வழக்கம்போல் இயக்குவீர்.. தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர்!

* கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்

தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த கீழ்கண்ட தடங்கள்: திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம். 

1. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

2. மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த / முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். தேவையான ஊழியர்களைக் கொண்டு போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும்" என்றார் அமைச்சர் சிவசங்கர். 

Follow Us:
Download App:
  • android
  • ios