அதிமுக ஆளுமை அற்ற கட்சியாக இருந்துவருகிறது எனவும், தென்மாவட்டங்களை அது புறக்கணித்து விட்டது எனவும், திமுகவில் இணைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆளுமை அற்ற கட்சியாக இருந்துவருகிறது எனவும், தென்மாவட்டங்களை அது புறக்கணித்து விட்டது எனவும், திமுகவில் இணைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியில் பல அதிரடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கட்சியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் சசிகலா ஒருபுறம் ஈடுபட்டு வரும் நிலையில், கட்சிக்குள்ளாகவே நிலவிவரும் அதிகாரப்போட்டி மறுபுறம் கட்சியை அட்டம்காண வைத்துள்ளது. இதற்கிடையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் என்ற அடிப்படையில் அன்றாடம் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் பலர் கட்சியில் இருந்து தாங்களாகவே வெளியேறி திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வரிசையில்,

ஸ்ரீவைகுண்டம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் திமுகவின் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். திமுக தலைவரம் முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன். அதிமுக கோபி நகர் செயலாளர் காளியப்பன். குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், அமமுகவை சேர்ந்த மானாமதுரை மாரியப்பன் கென்னடி ஆகியோர் இணைந்தனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிந்து ரவிச்சந்திரன், காளியப்பன் இணைந்ததது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஸ்ரீவைகுண்டம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், தூத்துக்குடி மா. ஊராட்சி து.தலைவர், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணைதலைவராகிய நான் 20ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்தேன். இப்போது ஆளுமையற்ற கட்சியாக அதிமுக உள்ளது. தளபதி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அதை கண்டுபிடித்து சொல்லவேண்டும்,அதிமுகவிலுள்ளவர்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை பின் தொடர வேண்டும், தமிழ்நாட்டை மீட்க உறுதியான அரசு இருக்கவேண்டும், அது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் மட்டுமே முடியும். தென் பகுதியில் உள்ள மக்களை அதிமுக வெறுத்து ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாடு முழுமையும் வளர்ச்சியை முதல்வர் தலைமையில் வளரும்.
