Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் 6,010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு வழங்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

AIADMK is a non-religious party.. cm edappadi palanisamy speech
Author
Coimbatore, First Published Feb 17, 2021, 1:42 PM IST

திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் 6,010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு வழங்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்ப்பில் 73 சீர் வரிசைகளுடன் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி  “ஜாதி , மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு இந்த திருமண மேடையே சாட்சி” என தெரிவித்தார், “ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்த நாளில் திருமணங்கள் நடத்தப்படுகின்றது. அதிமுகவில் மட்டும்தான் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

AIADMK is a non-religious party.. cm edappadi palanisamy speech

தொடர்ந்து பேசிய முதல்வர் “திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் 6,010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தமிழக அரசு வழங்கி இருக்கின்றது. இதுவரை 2,98,849 அம்மா இரு சக்கர வாகனங்கள் பெண்களுக்கு மானிய விலையில்  வழங்கப்பட்டுள்ளது” என்றும் முதல்வர் தெரிவித்தார்.

AIADMK is a non-religious party.. cm edappadi palanisamy speech

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்,  செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட  அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். 123 ஜோடிகளுக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்த செலவில் 73 வகை சீர் வரிசைகள் வழங்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios