மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது என்பதே  முக்கிய பிரச்சனை. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்திற்கு வருமானம் மிகக் கடுமையாக சரிந்துள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பி.டி தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு நிதி நிலைமை மற்றும் செயல்படுகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.கடந்த பத்தாண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி நிலையை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி தியாகராஜன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு:- 

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் அன்றாட செலவுக்கே கடன் வாங்கும் நிலையில் அதிமுக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசுக்கு வருவாய் நான்கில் 1 பங்கு குறைந்து விட்டது. 2020 2001இல் மட்டும் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூபாய் 3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் 2006-2011 வரை திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது, ஆனால் அதிமுக ஆட்சியில் அந்த கட்டமைப்பு முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை ரூபாய் 1.50 லட்சம் கோடியாக இருந்ததால் நிதிப்பற்றாக்குறை மேலும் பன் மடங்கு அதிகமாகிவிட்டது. தமிழ்நாட்டின் தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கோடியாக பொதுக்கடன் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை 1.5 லட்சம் கோடி அடைந்ததால் நிதிப்பற்றாக்குறை அதைவிட பன்மடங்கு உயர்ந்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசுக்கு வருவாய் நான்கில் ஒரு பங்கு குறைந்து விட்டது. 2020-2021இல் மட்டும் வருவாய் பற்றாக்குறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. அதேபோல் அதிமுக ஆட்சியில் தமிழ் நாட்டின் கடன் சுமை குறித்து கணக்குகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. 

மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது என்பதே முக்கிய பிரச்சனை. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை 5.24 கோடியாக உள்ளது. என அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.