11 உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு அதிமுக பொதுக்குழு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் அ.தி.மு.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து 16(ஏ) என்ற 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், கே.சி.பி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.