நீதிமன்றம் சொன்னதால தான் நாங்க ஏத்துக்கணும்.. இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்..!

அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

AIADMK general committee issue.. Election commission shocked Edappadi Palanisamy

அதிமுக தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியே  கட்சி விதிகள் மாற்றத்தை அங்கீகரித்தோம் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

AIADMK general committee issue.. Election commission shocked Edappadi Palanisamy

இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் தான் அவரை நாங்கள் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து, கட்சி திருத்த விதிகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

AIADMK general committee issue.. Election commission shocked Edappadi Palanisamy

அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எந்த மாதிரியான தீர்ப்பு வருகிறதோ? அதையும் பின்பற்றுவோம்.  உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளின் போது தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படும் வகையில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டால் அதற்கேற்ப எங்களின் முடிவு இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios