Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பி.வேலுமணியின் நிழல் சந்திரசேகர் வீட்டில் 20 மணி நேரமாக தொடரும் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை தொடரும் நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

AIADMK executive Chandrasekhar house raids continue for 2nd day by Income Tax officials
Author
Kovai, First Published Jul 7, 2022, 9:56 AM IST

அதிமுக நிர்வாகி வீட்டில் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் வடவள்ளி சந்திரசேகர். அதிமுக எம் ஜி ஆர் அணியின் முக்கிய நிர்வாகியான வடவள்ளி சந்திர சேகர் அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராக இருந்து வருகிறார்.  கே சி பி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரசேகர் அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் மாநகராட்சி பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு டெண்டர் எடுத்து கோடி கணக்கான ரூபாய் பணத்தில் பணிகளை மேற்க்கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டின் போது நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெய்டின் போதும் வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் இரண்டு முறை லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனை நடத்தி வருகிறார்கள்.

AIADMK executive Chandrasekhar house raids continue for 2nd day by Income Tax officials

20 மணி நேரமாக தொடரும் சோதனை

நேற்று நன்பகல் 12.10 மணிக்கு ஆரம்பமான சோதனையானது  நள்ளிரவு 12.45 மணிக்கு முடிந்திருக்கின்றன. வடவள்ளி சந்திர சேகர் வீடு , தந்தை வீடு உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் ரெயிடு முடிந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக சந்திரசேகர் அலுவலகத்தில் 20  மணி நேரமாக சோதனை  நடத்திவருகின்றனர். இந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில்  முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் தெரிகின்றது.

இதையும் படியுங்கள்

எஸ்.பி வேலுமணியின் வலது கரம் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..! அலறும் இபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios