அஇஅதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்துக்கூட்டம் போட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்து அனைத்திலும் பிஜேபி தோல்வி அடைந்துள்ள நிலையில், அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், இணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக பல முக்கியமான அம்சங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதோடு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றால் அதை எப்படி எதிர்கொள்வது, பூத் கமிட்டி மற்றும் முகவர்களை நியமனம் குறித்தும் உத்தரவுகள் போடப்பட்டது. இது மட்டுமன்றி உட்கட்சிப் பூசல் தொடர்பாக பலரது குறைகளை கேட்டறிந்தார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.