AIADMK : 4ம் தேதி வரும் ரிசல்ட்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! அதிமுக தலைமை இவருதான் - பரபரக்கும் அதிமுக வட்டாரம்
கொரோனா சுகாதார பேரிடர் காலத்தில் தங்களுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்தவர்கள் செவிலியர்கள். - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.
இன்று செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு. அப்போது பேசிய அவர், கொரோனா சுகாதார பேரிடர் காலத்தில் தங்களுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்தவர்கள் செவிலியர்கள்.
இதில் அரசியலை பார்க்காமல், அந்த ஆட்சியில் நியமனம் செய்தவர்கள், முறையாக நியமனம் செய்யவில்லை என்றெல்லாம் இதிலே அந்த கருத்தை திணிக்காமல், அப்படி என்னத்தோடு பார்க்காமல், மனிதநேயத்தோடு அவர்கள் பணியாற்றியதற்கு இந்த அரசு அவர்களுக்கு நிரந்தர பணி நியமண ஆணையை உடனடியாக வழங்க வேண்டும். அதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் கைமாறாக இருக்கும்.
இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்
தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தைச் சொல்ல வேண்டும் என்று அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதிய போது மத்திய சட்டத்துறையே அங்கீகாரத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கடிதம் அனுப்பியது. வருகின்ற 4 தேதி உச்சமன்றத்தீர்ப்போடு இந்த பிரச்சினை நிறைவுக்கு வரும்.
சென்னையில் பெண் காவலுக்கு பாலியல் தொல்லை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இதில் தவறு செய்தவர்கள் அவர்களின் (திமுக) கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுப்பதற்கு துன்புறுத்தப்படாமல் நியாயமாக அவர்களிடம் புகாரைப்பெற்று பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எடுப்பார்களா ? என்பது சந்தேகம் தான் என்று கூறினார்.
இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்
இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்