Asianet News TamilAsianet News Tamil

AIADMK: எல்லாம் ஓகே! டெல்லியில் இருந்து வந்த சிக்னல்.. ஓபிஎஸ் குஷி! எல்லா பக்கமும் கேட்டா.? பதறும் எடப்பாடி!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருப்பதால், அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.

Aiadmk chief ops vs edappadi palanisamy fight delhi politics
Author
First Published Jan 13, 2023, 7:15 PM IST

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் ஆட்சியில் இருந்ததைப் போல, தற்போது அதனை ஓரளவு சமாளித்தும் வந்திருக்கிறார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது.தற்போது அதிமுகவின் பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

Aiadmk chief ops vs edappadi palanisamy fight delhi politics

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

ஆனால் தேர்தல் ஆணையத் தரவுகளின் படி இன்னும் மூன்று ஆண்டுகள் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவே தொடர்கிறார். இதன் காரணமாக அவர் ஒப்புதல் இன்றி நடந்த பொதுக்குழு செல்லுமா என்பது கேள்வியாக இருக்கிறது. தற்போது அதிமுக வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இறுதி வாதத்தை முன்வைக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு தான் சாதகமாக வரும் என இரு தரப்புமே நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Aiadmk chief ops vs edappadi palanisamy fight delhi politics

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவரை சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கேட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி மாத கடைசியில் இந்த பயணம் இருக்கும் என்றும், அப்போது பாஜக மேல்மட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios