அதிமுக வேட்பாளர்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!
மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக மெகா கூட்டணியில் பா.ஜ.க, தேமுதிக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ், தமாகாவுக்கு தொகுதிகள் ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி, காங்கிரஸ் ஆனிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது போக திமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 20 தொகுதிகள் மற்றும் 18 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக கடந்த கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதுவரை நாடாளுமன்றத் தேர்தலுக்காக 10 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யுமாறு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. தேபோல் திமுக வேட்பாளர்கள் வரும் 25-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.